25_06

விண்ணகத்தில் கைம்மாறு...


பொதுக் காலம் 11ஆம் வாரம்
17.06.2025 - செவ்வாய்க் கிழமை 

மூன்று மனநிலை நம்மிடம் இருக்கிறது. 
1. கடவுள் சார்பாக செயல்படுவது 
2. மனிதர் சார்பாக செயல்படுவது
3. தனக்கு ஏற்றார் போல செயல்படுவது.
இந்த மூன்றும் இணைந்து செல்ல வேண்டும். இதில் கடைசி இரண்டு அதிகமானால் ஆபத்து தான். 

தன்னை பற்றி மட்டும் யோசிப்பவர் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவாதவர். பிறரை பற்றி யோசிப்பவர் சமூகத்தின் பாதி வளர்ச்சிக்கு உதவுகிறார்.

தன்னை போல பிறரை நினைப்பவர் சமூகத்தின் முழு வளர்ச்சிக்கும் உதவுகிறார். முழு மானிட உறவுக்கு வழிவகுப்பார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 5:43-48) இயேசு தம் சீடருக்குக் கூறியது: “ ‘உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.

இயலாத ஒன்றாக மாறி போய்விட்டது பகைவரை அன்பு கூர்வது. வெறுப்பு, கசப்புணர்வு இன்று நம் மனதில் தேங்கி விட்டது.

கொடுப்பவருக்கு இன்னும் கொடுக்க நினைக்கும் மனம் திரும்ப செய்ய இயலாதவர்களுக்கு எதையும் செய்வதில்லை. நம் வாழ்க்கை பலனை எதிர்பார்த்து எதிர்பார்த்து வாழ பழகி விட்டது. கொடுத்தல் வாங்கல் முறை தான் நம் வாழ்க்கை முறை.

விண்ணகத் தந்தையின் நிறைவுள்ள மனது நம்மிடம் இருந்தால், நாமும் ஆள் பார்த்து செயல்பட மாட்டோம், விருப்பு வெறுப்புகளை கடந்து பணி செய்வோம்.

திருப்பிக் கொடுப்பவருக்கே கொடுத்தால் நமக்கான கைம்மாறு இவ்வுலகிலே கிடைத்து விடும். நமக்கான கைம்மாறு எதையும் எதிர்பாராமல் செய்யும் போது விண்ணகத்தில் சேர்க்கப்படும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...