பாஸ்கா காலம் 7ஆம் வாரம்
07.06.2025 - சனிக் கிழமை
சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?" - மத்தேயு 10:25
இயேசுவின் சீடருக்கு முன்னோக்கிய சிந்தனை இருக்க வேண்டும். பலவற்றை வாழ்க்கையில் கற்றுக் கொள்கிறோம். சில பாடங்களாக இருக்கின்றன, சில முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருக்கின்றன.
அடுத்தவரை பற்றிய அக்கறை தேவை, அடுத்தவரை பற்றிய பொறாமை தேவையில்லை.
என்னால் அடுத்தவருக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பது தான் நம்முடைய கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர அடுத்தவருக்கு என்ன ஆகும்? அடுத்தவர் நிலை என்ன? என்பது நம்முடைய தேடலாக இருக்கக் கூடாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:20-25) பேதுரு இயேசுவிடம் ஆண்டவரே இவருக்கு (அன்புச் சீடருக்கு) என்ன ஆகும்? என்ற கேள்வியை கேட்கிறார். இயேசுவின் பதில் நீ என்னை பின்தொடர்ந்து வா என்பதே. பேதுரு ஏன் இந்த கேள்வியை கேட்கிறார்?
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவை பார்த்து, "நீ கைகளை விரித்து கொடுப்பாய். வேறொருவர் உன்னை கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு கூட்டி செல்வார்" என்று சொல்லி இருப்பார்.
தனக்கு இந்த நிலை என்றால் இயேசுவோடு இருக்கக்கூடிய மற்ற சீடர் குறிப்பாக அவருடைய அன்புச் சீடருக்கு என்ன ஆகும் என்ற ஆர்வம் பேதுருவிடம் இருந்தது.
இயேசுவின் அன்பு சீடராக மாறுவது என்பது இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்ட அன்பை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதே.
அன்பு பகிரப்படும் போது பல்வேறு இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கு இயேசு ஒரு முன்மாதிரி.
No comments:
Post a Comment