24_06

அவரவருக்கு உரியது அவரவருக்கு...


04.06.2024 - செவ்வாய்க் கிழமை

"அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட; உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்" - லேவியர் 25:36

'என்னுடையது எல்லாம் உங்களுடையதே' என்ற மனநிலை இருந்தால் நாம் தான் வாழும் புனிதர்கள். அப்படி இல்லை, 'எனக்குரியது எனக்கு, உனக்குரியது உனக்கு' என்று இருந்தாலும் பரவாயில்லை. 

ஆனால் இங்கு 'எல்லாம் எனக்கே' என்ற மனநிலை தான் மேலோங்கி இருக்கிறது. 

பேரும் புகழும் பெருமையும் எனக்கு, என்னை தவிர வேறு யாரும் முன்னேறி விடக் கூடாது என்ற எண்ணம் நம்மில் உயர்ந்து இருக்கிறது. 

அடுத்தவருக்கு நாம் கொடுப்பதோ வெறுப்பும், கோவமும், எரிச்சலும், சோதனையும் தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 12:13-17) செருக்கும் ஆணவமும் அகங்காரமும் நிறைந்த பரிசேயரும் எரோதியரும், இயேசுவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இந்த கேள்வியைத் தான் அவர்கள் முன்வைக்கிறார்கள். 

இந்த கேள்வியில் உண்மைத்தனம் இல்லை மாறாக, வெளிவேடத்தனம் தான் இருந்தது. இயேசு தெனாரியத்தை பார்த்து, அதில் பொறிக்கப்பட்ட உருவமும் எழுத்தும் யாருடையவை? என்று கேட்டார். சீசருடையவை என்று பதில் வந்ததும் 'சீசருக்குரியவற்றை சீசருக்கும் கடவுளுக்குரியவற்றை கடவுளுக்கும் கொடுங்கள்' என்கிறார்.

ஏனென்றால் ஒருவருடைய உருவத்தை வைத்திருக்கக்கூடியவர்கள் உருவ வழிபாட்டை செய்பவர்களாக மாறிவிடுகிறார்கள். நம்முடைய பணமும் செல்வமும் இன்று கடவுளின் இடத்தை பிடித்து விட்டது. 

உலகம் போட்டி மனப்பான்மையில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகை வெல்ல ஆசை, ஆனால் தொலைத்துக் கொண்டிருப்பதோ ஆன்மாவை...

இங்கு கடவுளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை மற்றவர்களுக்கு, மற்றவர்களுக்கு கொடுப்பது முறையல்ல. 

அவரவர்க்குரியதை அவரவருக்கு கொடுக்க வேண்டும். கடவுளுக்குரிய இடத்தில் அடுத்த(வரை)தை வைப்பது சிலை வழிபாடு. 

மற்றவரின் மாண்பை சிதைப்பது, மற்றவரின் உடைமைகளை பறிப்பது கடவுளை எதிர்ப்பதன் அடையாளம்.

அவரவர்க்குரியதை அவரவருக்கு கொடுப்போம்... அதன் வழியாக நமக்குரியதை பெற்றுக் கொள்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...