பொதுக் காலம் 6ஆம் வாரம்
18.02.2025 - செவ்வாய்க் கிழமை
"இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின; இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்" - எசாயா 66:2
அன்பை/உணர்வை புரிந்துக் கொள்ளாதவரிடம் கோபத்தின் உச்சக் கட்டத்தில் இந்த கேள்வி கேட்கப்படும், உங்க மனசு என்ன கல்லா? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிச்சு?
பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லு என்பார்கள். இங்கு அனைவரின் மனசும் கல்லாக தான் இருக்கிறது. நல்லவற்றை துய்த்து உணராத படி மனங்கள் மழுங்கி போயிருக்கிறது. குற்ற உணர்வு இல்லாத மனிதர்கள் இங்கு நல்லவர்களை எதிர்க்கிறார்கள், நல்லவர்களை வாழ விடுவதில்லை
சிலர் சிலவற்றை சொல்லி சொல்லி மனசு அலுத்து போய் விட்டனர். சிலர் சொல்லி என்னவாக போகிறது என்று சொல்லாமல் விட்டு விடுகின்றனர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:14-20 ) தன்னை புரிந்துக் கொள்ளாத சீடர்களை இயேசு சாடுகிறார். "நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?"
பார்த்தும் கேட்டும் புரிந்துக் கொள்ளதவர்களை என்ன தான் செய்வது? என்பது அன்றும் இன்றும் தொடர்கிற கேள்வி.
அப்பம் இல்லையே என்பது அவர்களின் கேள்வி? உள்ளம் மழுங்கி போனதே என்பது இயேசுவின் குமுறல்.
இயேசுவின் ஏக்கம், புரிந்து கொள்ளாதவர்கள் எப்படி இறையாட்சியை பரப்புவார்கள் என்பதாக இருந்திருக்கும்.
மந்த புத்தி மனதை கல்லாக்கி விடும். மழுங்கிய உள்ளதை பழுது பார்த்து பக்குவப்படுத்துவோம். மனது உணர்வுள்ளதாகட்டும்.
No comments:
Post a Comment