நலம் நல்கும் புனித லூர்து அன்னை...
11.02.2025 - செவ்வாய்க் கிழமை
1858 பெப்ரவரி 11 ஆம் நாள் தொடங்கி 1858 ஜீலை 16 வரை அன்னை மரியாள் பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் பெர்னதத் சூபிரூஸ் என்ற சிறுமிக்கு தொடர்ச்சியாக காட்சியளித்தார்.
பெப்ரவரி 25 ஆம் நாள் காட்சியில் மரியன்னையின் கட்டளைப்படி பெர்னதெத் ஒரு இடத்தில் தோண்ட அங்கு நீரூற்று பீறிட்டெழுகின்றது. அதுவே பின்நாளில் ஓடையாக மாறி இன்றும் திருப்பயணிகளின் நோய் நீக்கும் அற்புத சுகமளிக்கும் இடமாகத் திகழ்கிறது.
இன்றும் எண்ணற்ற நோயாளிகள் லூர்து நகருக்கு வந்து அற்புத சுகம் பெற்று செல்கின்றனர். லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்படும் பிப்பிரவரி 11 ஆம் நாளைத் தான்; திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் உலக நோயாளர்கள் தினமாகத் தேர்ந்தெடுத்து 1992 ஆம் ஆண்டிலிருந்து நாம் கொண்டாட வழிவகுத்திருக்கின்றார்.
No comments:
Post a Comment