21.02.2025 - வெள்ளிக் கிழமை
"அறிவுத்தெளிவுடன் இருங்கள்; நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்; பாவஞ் செய்யாதீர்கள். ஏனெனில் உங்களுள் சிலருக்குக் கடவுளைப்பற்றிய அறிவு இல்லை. உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்" - 1 கொரிந்தியர் 15:34
நாம் செய்த தவறுக்காக தலைகுனிதல் ஏற்பட்டால் அவமானம் நமக்கு தானே! அசிங்கப்பட்ட பின் எவ்வளவு பேசினாலும் போன மானம் திரும்பாது.
எல்லா மனிதர்களும் தவறக் கூடியவர்கள் தான் என்ற எண்ணம் தான் நம் எல்லோரையும் தவறு செய்ய வைத்து விடுகிறது.
தண்டனையா கடைசியில் தானே! பார்த்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் நம்மை மென்மேலும் தவறு செய்ய தூண்டுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:34:9:1) என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்” என்று ஒரு கண்டனத்தை நம் முன் போடுகிறார்.
இவ்விபசாரத் தலைமுறையினர் என்ற வார்த்தையும் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
உலகம் முழுவதையும் ஆதாயம் ஆக்க எண்ணுவோரை இது குறிக்கிறது. உலகம் சார்ந்த காரியங்கள் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நாம் எண்ண முடியாத அளவுக்கு இங்கு ஆச்சரியங்களும் குவிந்து கிடக்கின்றன, அதே போல அழிவும் குவிந்துக் கிடக்கின்றன.
உலகை கண்ணோக்கினால் இப்போது ஆனந்தம் தான், உலகு சார்ந்தவற்றை மட்டும் தேடினால் வெட்கப்படுவது நிச்சயம் தான்.
உலகை சார்ந்திராமல் யாரும் வாழ முடியாது. அதே சமயம் உலகினர் காட்டும் எல்லா பாதையும் சரியானது அல்ல.
இறைவார்த்தையை ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. வார்த்தைக்கு ஆற்றல் உண்டு. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்...
நமக்கொரு வாழ்வு மேல உண்டு என்று நம்பினால் வெட்கத்திற்கு உள்ளாகாமல் இருக்க நற்காரியங்களை செய்வோம். படைத்தவர்முன் தலைநிமிர்ந்து நிற்போம்.
No comments:
Post a Comment