24_05

பேணி வளர்க்க அன்பு தேவை...


17.05.2024 - வெள்ளிக்கிழமை 

அன்பு ஒன்றே போதும் அடுத்தவரை அரவணைக்க, அடுத்தவரை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல. 

சில வேளைகளில் அன்பு கொண்டுள்ளவர்கள் அதை சொல்லில் காட்ட மாட்டார்கள். (உதாரணமாக, நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்று வெறும் வார்த்தையில் சொல்ல மாட்டார்கள்). அந்த அன்பு என்பது செயலில் வெளிப்படும். இயேசுவும் தன் வாழ்வில் அன்பை தன்னுடைய சொல்லில் அல்ல செயலில் வெளிக் காட்டினார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:15-19) இயேசு பேதுருவை பார்த்து, என்னை அன்பு செய்கிறாயா? என்று  மூன்று முறை கேட்கிறார். 

இந்த அன்பு தன்மீது உள்ளதா என்பதல்ல... தன் மந்தை மீது அன்பு உள்ளதா என்ற ஆழமான கேள்விகளே!

'என் ஆடுகளைப் பேணி வளர்' என்றே இயேசு பேதுருவிடம் சொல்கிறார். தலைமைத்துவ பண்பில் அன்பு இருக்க வேண்டும். மற்றவர்களை எளிதாக ஆதிக்கம் செய்து விடலாம், ஆனால் அன்பு செய்வது அவ்வளவு எளிது அல்ல.

இயேசு தன்னுடைய திருத்தூதர்களுக்கு கொடுக்கக்கூடிய தலைமைத்துவ பண்பு என்பது அன்பிலிருந்து தொடங்குகிறது.

இயேசுவைப்போல மற்றவரின் முன்னேற்றத்திற்கு நம் அன்பு என்னும் முதல் ஆயுதத்தை எடுத்து வைப்போம். அன்பே வளர்ச்சியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...