8. 'மீட்பரின் பாதுகாவலர்' என்ற திருத்தூது ஊக்க உரையை வெளியிட்டவர் யார்? அதில் குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
1989ஆம் ஆகஸ்ட் 15அம் தேதி, திருத்தந்தை புனித 2ஆம் யோவான் அவர்கள், ‘மீட்பரின் பாதுகாவலர்’ என்ற திருத்தூது ஊக்க உரையை வெளியிட்டார். புனித யோசேப்பு வாழ்வில் விளங்கிய பல்வேறு பண்புகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. (மீட்புத் திட்டத்தில் புனித யோசேப்பின் பங்கு, திருக்குடும்பத்தில் அன்பான தந்தை…)
9. திருப்பலியில் பயன்படுத்தப்படும் முதல் நற்கருணை மன்றாட்டில் புனித யோசேப்பின் பெயரை சேர்த்த திருத்தந்தை யார்?
1961ஆம் ஆண்டு திருத்தந்தை புனித 23ஆம் யோவான் இப்புனிதரின் பெயரை முதல் நற்கருணை மன்றாட்டில் இணைத்தார்.
காண்க…
10. அனைத்து நற்கருணை மன்றாட்டிலும் புனித யோசேப்பின் பெயரை சேர்த்த திருத்தந்தை யார்?
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2013 ஆம் ஆண்டு மே மாதம் புனித யோசேப்பு திருநாளன்று இப்புனிதரின் பெயரை, திருப்பலியில் பயன்படுத்தப்படும் அனைத்து நற்கருணை மன்றாட்டிலும் சேர்த்தார்.
காண்க…
11. எந்த திருத்தந்தை மே மாதம் 1ஆம் தேதியை புனித யோசேப்பின் விழாவாக அறிவித்தார்?
திருத்தந்தை 12ஆம் பயஸ். (யோசேப்பை தொழிலாளர்களின் பாதுகாவலர் என்று அறிவித்தார்)
12. புனித யோசேப்பு ஏன் முதுமை தோற்றத்தில் சித்தரிக்கப்படுகிறார்?
இறைவனின் அன்னையான மரியாவின் கன்னிமையை காக்கின்ற விதத்தில், புனித யோசேப்பு வயதில் முதிர்ந்தவராக சித்தரிக்கப்படுகிறார்... (அது உண்மையல்ல)
13. புனித யோசேப்பு ஆண்டு எப்போது சிறப்பிக்கப்பட்டது?
2020 டிசம்பர் 8 முதல் 2021 டிசம்பர் 8 வரை. (2020 டிசம்பர் 8அம் நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் ‘தந்தையின் இதயத்தோடு’ என்ற திருத்தூது மடலை வெளியிட்டார்.)
14. புனித யோசேப்பை குறித்த பாரம்பரிய இறைவேண்டல் (முதல் நூற்றாண்டிலேயே செபிக்கப்பட்டது)
ஓ! புனித யோசேப்பே,
நான் உம்மைப் பற்றி சிந்திக்க ஒருபோதும் சோர்வடைவதில்லை.
இயேசு உங்கள் கரங்களில் உறங்குகிறார்.
அவர் உங்கள் இதயத்திற்கு அருகில் இருக்கும்போது நான் உம்மை அணுகத் துணிவதில்லை.
என்பெயரால் அவரை நெருக்கமாக அழுத்தி, இயேசுவின் நேர்த்தியான நெற்றியில் எனக்காக முத்தமிட்டு, நான் இறக்கும் தருவாயை நெருங்கும்போது அந்த முத்தத்தை எனக்கு திருப்பிதர அவரிடம் கேளுங்கள்.
எங்கள் மரண வேளையில் உடனிருக்கும் புனித யோசேப்பே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். - ஆமென்
No comments:
Post a Comment