24_10

வெற்றி தரும் செபமாலை அன்னை


செபமாலை அன்னை திருவிழா

07.10.2024 - திங்கட் கிழமை

படிப்பறியாத ஏழை பாமர மக்கள் தாவீது எழுதிய 150 பாடல்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னி மரியா கொடுத்த செபமாலை அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியே வாழ்க செபம் நிச்சயம் திருப்பாடல்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

செபமாலையின் மகிமையை பற்றி அன்னை மரியா பலருக்கு தோன்றி விளக்கியுள்ளார்கள். நீங்கள் அருள் நிறைந்த மரியே! என்ற செபத்தை சொல்லும் பொழுதெல்லாம் எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள் என்று அன்னை மரியா காட்சியில் வெளிப்படுத்தி உள்ளார். (செபமாலை என்பது ரோசாப் பூவை குறிக்கும்).

செபமாலையில் முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்து செபிக்கும் பொழுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களை கோர்த்த கிரீடத்தை கொடுக்கிறீர்கள் என்றும் அன்னை மரியா கூறியுள்ளார்.

ஜெபமாலை குறித்து புனிதர், திருத்தந்தையரின் கருத்து :

திருத்தந்தை 11ஆம் பத்திநாதர் - செபமாலை சொல்லும் ஒரு படையை எனக்கு தாருங்கள். இந்த உலகை வென்று காட்டுகிறேன்.

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் - அற்புதமான செபம் எளிமையிலும் ஆழத்திலும் அற்புதமான செபம். ஆவே மரியா பின்னணியில் நம் ஆன்மாவின் கண்களின் முன்னே இயேசு கிறிஸ்துவின் வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் கடந்து செல்கின்றன.

புனித சார்லஸ் பொரோமேயு - திருப்பலிக்குப் பின் அடுத்த அதிக மாபெரும் தெய்வீகம் கொண்டது செபமாலை.

புனித பிரான்சிஸ் சலேசியார் - ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செபமாலையின் மறையுண்மைகளை தியானித்தால் புனிதராவோம்.

1571இல் துருக்கியருக்கு எதிரான போரில் கிறித்தவர்களை வெற்றி பெறச் செய்தது அன்னை மரியாவிடம் செபித்த தொடர் செபமாலையே.

செபமாலையை கையில் எடுக்கின்ற போது அலகை நம்மை விட்டு தூர ஓடிப் போகிறான். அன்னை மரியாவோடு இணைந்து செபமாலை செபிக்கின்ற போது நாம் விண்ணகத்திற்கான ஏணியை பற்றிக் கொள்கிறோம். 

ஏணியில் ஏறுகின்ற போது நம்முடைய கவனம் முன்னோக்கியதாக இருக்க வேண்டும். கால்கள் முன்னோக்கி செல்வது போல செபமாலை செபிக்கின்ற போது நம்முடைய கைகள் முன்னோக்கி செல்ல வேண்டும். நம் உள்ளமும் இறைத்திருவுளத்தை நிறைவேற்ற ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் தோல்வி இருக்கக்கூடாது என்பதல்ல. தோல்விகளை தாங்கிக் கொண்டு அதை கடந்து வருவது தான் வெற்றி.

அன்னை மரியா இதற்கு சிறந்த உதாரணம். உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிய போதிலும் கூட அந்த துன்பத்தை ஒரு தடையாக எண்ணாது அதை வெற்றி கொண்டார்.

தாயின் கரத்தைப் பற்றிக் கொள்வோம். அவர் நம்மை காப்பாற்றுவார்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...