25_03

இலாபம் என்னும் எதிர்பார்ப்பு...


பொதுக் காலம் 8ஆம் வாரம்

04.03.2025 - செவ்வாய்க் கிழமை 

"ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்; இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்" - எரேமியா 6:13

எந்த செயலையும் யாரும் இலாபம் எதிர்பார்க்காமல் செய்வதில்லை. சில செயல்களின் மூலம் சிலருக்கு பணமோ, பெயரோ, பதவியோ, நற்பெயரோ, புகழோ கிடைக்கும். ஆதாயம் இல்லாமல் எறும்பு கூட கூடு/புற்று கட்டுவதில்லை.

எல்லாவற்றிலும் இலாபம் பார்க்கும் மனிதர்கள் எல்லாவற்றையும் பார்த்து தான் செய்வார்கள். உடனடி பலன் என்றால் உடனடி சேவை, இல்லையேல் தள்ளி போடப்படும்.

ஆசை யாரை தான் விட்டது. எல்லா இடத்திலும் இலாப நோக்கு தலைவிரித்து ஆடுகிறது. 10,000 பணம் கடனாக கொடுத்து 50,000 வரை வட்டி வைத்து இலாபம் பெறும் கூட்டம் தான் இன்று முன்னிலையில் இருக்கிறது. (அறிவற்ற செல்வனுக்கு சொல்லப்பட்ட பதில் தான் இத்தகையோருக்கு- லூக்கா நற்செய்தி 12:20 ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:28-31) பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார். இயேசுவின் சீடத்துவத்திடமும் எதிர்பார்ப்பு இருந்தது.

இயேசுவின் பதில், "இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்".

பேதுருவிடமும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தைரியமான நபர் வெளிப்படையாக கேட்டு விட்டார்.

நாமும் இவ்வுலகில், நம் குடும்பத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் எதையும் செய்வதில்லை. திரும்ப கிடைக்கும் என்பதாலேயே இங்கு பல காரியங்கள் நடக்கிறது.

எப்போது பலன்/ இலாபம் எதிர்பாராமல் ஒரு காரியம் நடைபெற ஆரம்பிக்கிறதோ, அப்போது நாம் இறையாட்சியை நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.

கடமையை செய்து பலனை எதிர்பாராத வாழ்க்கை வாழ முற்படுவோம்... எதையும் எதிர்பாராத வாழ்க்கை எதையும் ஏற்றுக் கொள்ளும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...