25_03

சாம்பல் புதன்

திருநீற்றுப் புதன்

05.02.2025 - புதன் கிழமை 

"இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்" - யோனா 3:6

தவக்காலம் எப்படி 40 நாட்கள்? மார்ச் 05 2025 தொடங்கி 19 ஏப்ரல் 2025 வரை தவக்காலம்.

இதற்கு இடையில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளை நீக்கினால் 40 நாட்கள் வரும்.

ஏன் 40 நாட்கள் தவக்காலம்?

பழைய ஏற்பாட்டு புரிதலில் 

நோவாவின் காலத்தில் மண்ணுலகில் 40 நாள் பகலும் இரவும் பெருமழை பெய்தது. (தொ நூ 7:12)

மோசே 40 நாள் பகலும் இரவும் சீனாய் மலையில் தங்கி இருந்தார். (வி ப 24: 18)

கடவுளின் சினம் குறைய 40 பகலும் இரவும் மோசே நோன்பு இருந்தார். (இ ச 9:18,25)

எலியா 40 பகலும் இரவும் நடந்து ஒரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார். (1அரசர்கள் 19:8)

புதிய ஏற்பாட்டு புரிதலில் 

இயேசு 40 நாட்கள் நோன்பு இருந்தார். இயேசுவை அலகை 40 நாட்கள் சோதித்தது. 

நாற்பது என்பது அடையாளம்.

இந்த தவக்காலத்தில் நாம் எடுக்க இருக்கும் உறுதிப்பாடு என்ன?

- சிலவற்றை சில நாட்களுக்கு விட்டு விடுகிறேன் என்பதா? (அசைவ/உயர்தர உணவு, கெட்ட பழக்கங்கள், தீய சிந்தனைகள், அலைபேசி மோகம், ஊடக தொடர்பு...)

- இயேசுவின் பாடுகளை யோசித்து பார்த்து விட்டு கடந்து செல்வதா?

- ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வதா?

- இரத்தம், உடல் உறுப்புகளை தியாகம் செய்வதா?

- அழுது புலம்புவதா?

- அமைதி காப்பதா?

- இருப்பதை பகிர்வதா?

- காயபடுத்தியவரை மன்னிப்பதா? காயப்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்பதா?

எதை எடுக்க போகிறோம்? எதை விட போகிறோம்?

சாம்பல் நமக்கு உணர்த்துவது - மனமாற்றம், ஒன்றுமில்லாமை, புது வாழ்வு பெறுதல்

பழைய ஏற்பாட்டில் சாக்கு உடை உடுத்தி சாம்பல் மீது அமர்ந்து/ சாம்பல் பூசி பலர் மனமாற்றத்தை வெளிப்படுத்தினார்கள்.

சாம்பல் முழுக்க முழுக்க மனமாற்றதின் அடையாளம். திருப்பலி முடிந்த பின் சாம்பல் வாங்க கூச்சல் போடுவதிலோ அடித்துப் பிடித்து சாம்பல் வாங்குவதிலோ ஒரு பயனும் இல்லை. மாறாக மனம் திரும்பி நற்செய்தியை நம்ப வேண்டும். நற்செய்தியின் படி வாழ வேண்டும்.

இதுவே தகுந்த காலம், இறை இரக்கத்தை அதிகம் உணரும் காலம். குற்றத்தை உணர்ந்த உள்ளதோடு அவரிடம் திரும்புவோம்.

ஆயன் ஆடுகளை பசும்புல் வெளிக்கு அழைத்துச் செல்வது போல கடவுள் நம்மை நீரோடைக்கு அழைத்துச் செல்வார்...

மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்பும் முன் படைத்தவரை உள்ளத்தில் நினைப்போம்... மனமாற்றம் பெற்ற மாந்தர்களாக வாழ்வோம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...