25_01

உயிர் விலைமதிப்பில்லாதது!

பொதுக் காலம் 2ஆம் வாரம்

22.01.2025 - புதன் கிழமை

"எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்; அதை அவர்களிடமிருந்து பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள்" - சீராக்கின் ஞானம் 34:21

ஒரு பக்கம் உயிரை காக்க குடும்பத்தினரும் மருத்துவர்களும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் பழிவாங்கவதற்காக, உயிரை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரே உயிர் தான் ஆனால் அது உணரப்படும் நபர்களை பொறுத்து மாறுபடுகிறது.

உயிரை சர்வ சாதாரணமாக சாய்த்து விடுகிறார்கள் உயிரின் மதிப்பை உணராத மிருகங்கள். இன்றைய காலக் கட்டத்தில் உயிர் விலை பேசப்படுகிறது, கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன, மனித கடத்தல், பாலியல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 

உயிரை விட பணமோ/சட்டமோ முக்கியமல்ல. ஒருவரின் அவசர தேவையில் அவரின் தேவை அறிந்தும் உதவாமல் இருப்பது தவறு தான். நன்மை செய்ய கூடுமாயின் நன்மை செய்ய வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்று 3:1-6) தொழுகைக் கூடத்தில் இருந்த சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் கை சூம்பியவரை குணப்படுத்துவாரா? என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். 

அவர்களை வாயடைக்க இயேசு பேசிய வார்த்தைகள், ஓய்வு நாளில் நன்மை செய்வதா தீமை செய்வதா? உயிரைக் காப்பதா அழிப்பதா? எது முறை என்று கேட்டார்.

சிலர் சட்டங்களை நுணுக்கமாக கடைப்பிடிப்பதாக எண்ணி கடவுளின் அன்பிலிருந்து விலகிச் செல்கிறார்கள். கடவுளின் சாயலும் உருவும் இருக்கும் அயலானை அன்பு செய்யாமல், அவனுக்கு நன்மை செய்யாமல் கடவுளை நெருங்கி விட முடியாது.

உயிரை படைத்தவர் அதை பாதுகாக்கும் பொறுப்பை நம்மிடம் கொடுத்திருக்கிறார். உயிரை அழிக்க நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. அது நமது உயிராகவோ அடுத்தவர் உயிராகவோ இருக்கலாம். உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.

உயிரை அளித்தவர் உயிரை எடுக்கும் உரிமையை பெற்றிருக்கிறார். நன்மை செய்ய தவறும் ஒவ்வொரு நிமிடமும் நம்மால் ஒரு உயிர் போய்க் கொண்டிருக்கிறது.

கெடுதல் செய்வதும், நன்மை செய்யாமல் இருப்பதும் ஒன்றே.

யாக்கோபு எழுதிய திருமுகம் 4:17 இல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது, " நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்."

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...